காவேரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணையி்ல் இன்று காலை நீர் மட்டம் 114.6 அடி. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி௦. அணைக்கு விநாடிக்கு 45,857 கனஅடி தண்ணீ்ர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 998 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவேரி பாசன பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் காவேரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.