காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன முதுகெலும்பாகத் திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு அளவிற்கு நிரம்பியுள்ளது!
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் கடந்த ஒரு வார காலமாகப் பெய்த தொடர் மழையால், காவிரியில் மீண்டும் நீர்பெருக்கு ஏற்பட்டது.
இதன் விளைவாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும், தர்மபுரி, ஓசூர் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.63 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீரின் அளவு 35,000 கன அடியாக உள்ளது.
அணை முழு அளவை எட்டிவிட்ட காரணத்தினால், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.