மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை பொறியாளர்களை (சிவில், எலக்ட்ரிக்கல்) தேர்வு செய்வதற்கான நாடு தழுவிய போட்டித் தேர்வு வரும் 05.04.2009 (ஞாயிறு) அன்று நடக்க உள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விவரம் வருமாறு :
சி.பி.டபுள்யூ.டி. மற்றும் எம்.ஈ.எஸ். துறைகளில் பணிபுரிய குரூப் சி இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
சம்பள விகிதம் 5,000 முதல் 8,000 வரை (திருத்தியமைப்பதற்கு முன்)
வயது விவரம் : போட்டியாளர் 30.01.2009 அன்று 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 31.01.1982-க்கு முன்பாகவோ அல்லது 30.01.1991-க்கு பின்பாகவோ பிறந்திருக்கக் கூடாது.
முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.
போட்டியாளர் 30.01.2009 அன்று பின்வரும் கல்வித் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்:
1. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து சிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி
2. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பட்ட படிப்பு
3. ஏ.எம்.ஐ.இ. (பிரிவு ஏ மற்றும் பி)-ல் சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்
4. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவில் டிப்ளமோ
5. பி.இ. எலக்ட்ரிக்கல் (எலக்ட்ரானிக்ஸ்/பவர்)
6. சிவில் மற்றும் ஸ்ட்ரக்சுரல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ
7. பிஇ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் என்ஜினியரிங்
8. சிவில் மற்றும் ரூரல் என்ஜினியரிங் பிரிவில் பட்டம்/டிப்ளமோ
9. பிஎஸ்சி சிவில் என்ஜினியரிங்
தேர்வுக் கட்டணம் : ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்வு கட்டணம் இல்லை. பிற பிரிவினருக்கு ரூ.100-க்கான மத்திய தேர்வு அஞ்சல் தலை (சி.ஆர்.எப்.எஸ்.).
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.01.2009 மாலை 5 மணி.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, மண்டல இயக்குனர், தென் மண்டலம், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரண்டாவது தளம், ஈ.வி.கே.எஸ். சம்பத் மாளிகை, கல்லூரிச் சாலை, சென்னை-600 006.