தமிழ்நாடு அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில் மாணவர்கள், இளைஞர்களுக்கு கணினி, செல்பேசி பழுபார்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கணினி பழுது பார்த்தல், பொருத்துதல், செல்பேசி கோளாறுகளை சரி செய்தல் உள்ளிட்டது தொடர்பான பயிற்சிகள் இந்த அமைப்பால் நடத்தப்படுகிறது. படித்த வேலையில்லாத பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
காலாண்டுத் தேர்வு விடுமுறையை பயனுள்ள வகையில் மாணவர்கள் கழிக்கும் வகையில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர் அல்லாத மற்றவர்களுக்கு பயிற்சிக் காலம் ஒரு மாதம் ஆகும்.
இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் 044- 26446319 என்ற தொலைபேசி எண்ணையோ, அல்லது 98400 77657 என்ற செல்பேசி எண்ணையோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.