வேலூர் மாவட்ட திமுக சார்பில் படித்த இளைஞர்களுக்கான 3 நாள் வேலைவாய்ப்பு முகாம் வரும் 28 ஆம் தேதி வேலூரில் தொடங்குகிறது.
திமுக நிறுவனத் தலைவர் அண்ணா, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் விழாக்களை ஒட்டி நடத்தப்படும் இந்த முகாமில் பல்வேறு முன்னணி அமைப்புகள், தொழிற்சாலைகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், ராணிப்பேட்டை அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படித்த இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பு முகாமிற்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 60 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று மதிப்படப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ள இடத்தை பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அவர்கள் இத்தகவல்களைத் தெரிவித்தனர்.