பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்தும் இணையதளம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பயிற்சிகளை அளிக்க தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
தேசியத் தகவல் மையம், சென்னை அலுவலகத்துடன் இணைந்து இதற்கான பயிற்சியை அளிக்கிறது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில், தினமும் 6 மாவட்டங்கள் வீதம் 5 கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
முதற்கட்டமாக இத்திட்டத்தை அமைச்சர் தா.மோ. அன்பரன்சன் வரும் 30 ஆம் தேதி காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்கள் இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் இணைக்கப்படும். அப்போது பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வேலைவாய்ப்பு, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் அளிக்கப்படும்.