திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழில் பழகுனர் பயிற்சி முகாமிற்கான தேர்வு வரும் 25, 25 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருவள்ளுவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2006, 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டு தொழிற்பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இதில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணி தொழிற்பயிற்சிக் கழகத்தால் வரும் 25, 26 ஆம் தேதிகளில் சென்னை ஆவடியில் உள்ள இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சிக்கான தேர்வு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி முகாம் வாயிலாக பழகுனர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ. 1,440 உதவித் தொகையாக அளிக்கப்படும். பழகுனர் பயிற்சிக் காலம் ஒராண்டு ஆகும்.