கணிப்பொறி அறிதல் எனப்படும் குறுகியகால பயிற்சி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் ஜூலை 9-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியில், விண்டோஸ் இயக்கு முறையும், எம்.எஸ். ஆபிஸில் அடங்கிய வோர்ட், பவர் பாயிண்ட், எக்ஸல் போன்றவற்றை இயக்கும் பயிற்சியும் அளிக்கப்படும்.
மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆர்வம் கொண்ட எவரும் இப்பயிற்சியில் பங்கு பெறலாம். இப்பயிற்சி தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி நடைபெறும். மேலும் தகவல்களுக்கு: 044-24410025, 24402894, 24915250.