Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தே‌ர்‌வி‌ற்கு ப‌ட்டதா‌ரி‌க‌ள் போ‌ட்டி போ‌ட்டு ‌வி‌ண்ண‌ப்ப‌ம்

Advertiesment
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தே‌ர்‌வி‌ற்கு ப‌ட்டதா‌ரி‌க‌ள் போ‌ட்டி போ‌ட்டு ‌வி‌ண்ண‌ப்ப‌ம்
, புதன், 31 டிசம்பர் 2008 (15:27 IST)
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தே‌ர்‌வி‌ற்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க நே‌ற்று இறு‌தி நா‌ள் எ‌ன்பதா‌ல் ப‌ட்டதா‌ரிக‌‌ள் ஏராளமானோ‌ர் போ‌ட்டி போ‌ட்டு‌ ‌வி‌ண்ண‌ப்‌பி‌த்தன‌ர். இதனா‌ல் அ‌ஞ்ச‌ல் அலுவலக‌ம் ம‌‌ற்று‌ம் அரசு ப‌ணியாள‌ர் தே‌ர்வாணைய‌த்‌தி‌ல் இளைஞ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் அலைமோ‌தியது.

webdunia photoFILE
தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,297 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டது.

இ‌ப்ப‌ணிக‌ளு‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க பட்டப் படிப்பு கல்வித்தகுதி ஆகு‌ம். ‌விள‌ம்பர‌ம் வெ‌ளியான நா‌‌ளி‌ல் இரு‌ந்தே இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.

இதற்கிடையே மேலும், 1,123 காலி இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. இதனா‌ல் காலி இடங்கள் 2,420 ஆனது.

விண்ணப்பிக்க ‌நி‌ர்ண‌‌யி‌க்க‌ப்ப‌ட்ட கடைசி தேதியு‌ம் டிசம்பர் 18இ‌ல் இரு‌ந்து டிச‌‌ம்ப‌ர் 30ஆ‌ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இ‌ப்பத‌விகளு‌க்கு விண்ணப்பிக்க நே‌ற்று கடைசி நா‌ள் எ‌ன்பதா‌ல் சென்னை ஓம‌ந்தூரா‌ர் அரசினர் தோட்டத்தில் உள்ள தே‌ர்வாணைய அலுவலக‌ம், தேர்வு கட்டணத்தை தபால் நிலையங்கள் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் என்பதால் அ‌ஞ்ச‌ல் அலுவலக‌த்‌திலு‌ம் பட்டதாரி ஆ‌ண்க‌ள், பெ‌ண்க‌ள் கூட்டம் அலைமோதியது.

இ‌ந்த குரூப்-2 தேர்வுக்கு சுமார் 4 லட்ச‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் விண்ணப்பித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத‌ற்கான தே‌ர்வு மார்ச் 22ஆ‌ம் தேதி நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil