Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள அலுவலர் பணிக்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க நவ.14 கடை‌சி நா‌ள்!

Advertiesment
கள அலுவலர் பணிக்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க நவ.14 கடை‌சி நா‌ள்!
, வியாழன், 6 நவம்பர் 2008 (16:10 IST)
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ.14ஆ‌மதே‌தி கடை‌சி நா‌ள் எ‌ன்று ஈரோடு மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் (பொறு‌ப்பு) மனோகர‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், கள அலுவலர் பணிக்கு முதுகலை பட்டம் பெற்று, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையில் பணியாற்றிய அனுபவம் உள்ள, 25 வயதுக்கு மேல் 35 வயதுக்கு‌ட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆ‌ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 25 வயதுக்கு மேல் 35 வயதுக்கு‌ட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப உறையின் மீது 'தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் திட்டம்' என்று குறிப்பிட்டு ஆட்சியர் மற்றும் தலைவர், ஈரோடு குழந்தை தொழில் ஒழிப்பு ஆதரவு சங்கம், 6-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு-11 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil