திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களில் நாளை நடைபெறுவதாக இருந்த 2ஆம் நிலை காவலர் உடற்தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் வரும் 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இரண்டாம்நிலை காவலர்களுக்கான உடற்தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின்படி, மேற்கண்ட தேர்வுகள், நவம்பர் 14ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.
உத்தப்புரம் விவகாரம் தொடர்பாக தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.