Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதியார் பல்கலையில் புகைபிடிக்கத் தடை!

பாரதியார் பல்கலையில் புகைபிடிக்கத் தடை!
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (17:50 IST)
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை, அக்டோபர் 2 ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வருகிறது. அரசின் இந்நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில், பாரதியார் பல்கலைக்கழம் புகைபிடிக்கத் தடை விதித்திருப்பதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. திருவாசகம் கோவையில் தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களிலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இதுதொடர்பான சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதையும் மீறி பல்கலைக்கழக் உணவு விடுதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடித்தால், அவர்களுக்கு ரூ. 100 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று துணைவேந்தர் திருவாசகம் மேலும் சொன்னார்.

இந்நடவடிக்கையில் மூலம், நாட்டிலேயே புகைப்பிடிப்பதற்கு தடை விதித்துள்ள முதலாவது கல்வி நிறுவனம் என்ற சிறப்பை, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil