Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புலமை பயிற்சி!

ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புலமை பயிற்சி!
, சனி, 9 ஆகஸ்ட் 2008 (13:12 IST)
உலக அளவில் நமது நாடு பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் என்று பல்வேறு துறைகளிலும் நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளிள் இந்தியர்களது தேவையும் அதிகரித்துள்ளது. இது, பணிக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு ஆங்கில மொழியில் நல்ல புலமையும், போதிய நிபுணத்துவமும் பெற்றிருக்க வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பிரிட்டீஷ் கவுன்சில்கள், ஆங்கில புலமையை மேம்படுத்தும் பயிற்சித் திட்டத்தை அளிக்க முடிவு செய்தன. இதன் ஒருபகுதியாக ஹார்ன்பை அறக்கட்டளை ஆதரவுடன், பிரிட்டனைச் சேர்ந்த யு.கே.இ.எல்.டி. அமைப்பு ஆசிரியர்களுக்காக பயிற்சி வகுப்பை நடத்தியது.

சென்னையில் உள்ள பிரிட்டீஷ் கவுன்சிலில், ஜூலை 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடந்த இந்த பயிற்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

'பயிற்சியாளர்களை பயிற்றுவித்தல்' என்ற தலைப்பில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில கல்விக் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (எஸ்.சி.ஈ.ஆர்.டி.), ஜவஹர் நவோதையா வித்யாலயா, பெங்களூருவில் உள்ள மண்டல ஆங்கில கழகம், ஹைதராபாத்தில் உள்ள வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்ப் பயிற்சியாளர்களுக்கு, இதில் சிறப்பு வகுப்புகளுடன் பயிற்சி தரப்பட்டது.

மாணவர்களுக்கு ஆங்கிலத்தை கற்பிப்பதில் உள்ள நடைமுறை உத்திகளை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளும், வழிமுறைகளும் இதில் அளிக்கப்பட்டன.

ஆங்கில இலக்கணத்தை மனதில் கொண்டு படிப்பது தேவையில்லை என்றும், சுவாரஸ்யத்துடன் வேடிக்கையாகவும், கற்பனைத் திறனுடனும் இவற்றை கற்பிக்க வேண்டும் என்று, பயிற்சிக்கு பொறுப்பேற்ற பேராசிரியர் பென்னி யூர் குறிப்பிடுகிறார்.

இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட், கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்து, 1976-ஆம் ஆண்டு இஸ்ரேலில் குடியேறியவர். அங்குள்ள தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளில் 30 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பித்த ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.

இந்தியாவைப் போல் உலகம் முழுவதும் 109 நாடுகளில் உள்ள 227 நகரங்களில், ஆங்கிலப் பயிற்சித் திட்டத்தை பிரிட்டீஷ் கவுன்சில் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil