Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக.3ல் கோவையில் காவலர் எழுத்துத் தேர்வு

ஆக.3ல் கோவையில் காவலர் எழுத்துத் தேர்வு
, திங்கள், 28 ஜூலை 2008 (12:35 IST)
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கோவை கொடிசியா இன்டெக் தொழில்நுட்ப மையத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்வு எழுதுவோர் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையை (Hall Ticket) கொண்டுவர வேண்டும் என்று கோவை மாவட்ட ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், மாவட்டக் காவல் அலுவலகத்தில் தொடர்புகொண்டு அதன் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.

Share this Story:

Follow Webdunia tamil