Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விசா நே‌ர்முக‌த் தே‌ர்வு ‌விள‌க்க‌ம்!

‌விசா நே‌ர்முக‌த் தே‌ர்வு ‌விள‌க்க‌ம்!
, சனி, 28 ஜூன் 2008 (10:52 IST)
அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்கள் விசா பெறுமநே‌ர்முக‌த் தே‌ர்‌வி‌ல் பிறர் சொல்லித்தந்ததை கூறாமல் நீங்கள் உங்கள் உண்மையான கருத்தை கூறுங்கள் என்று அமெரிக்க துணைத்தூதர் டேவிட் ஹாப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா‌வி‌ற்கு படிக்க செல்லும் மாணவர்கள் விசா பெறுவது எப்படி என்பது பற்றிய விளக்க நிகழ்ச்சி சென்னையில் நே‌ற்று நடைபெ‌ற்றது.

அமெரிக்க தூதரகத்தில் நடந்த இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் துணைத்தூதர் டேவிட் ஹாப்பர் உரையா‌ற்‌றினா‌ர்.

அவ‌ரது உரை‌யி‌ல், இந்திய மாணவர்கள் 83 ஆயிரம் பேர் இப்போது அமெரிக்காவில் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில் 75 சதவீதம் பேர் விசா பெற்றனர். மாணவர்கள் மட்டும் 32 ஆயிரத்து 538 பேர் பெற்றனர்.

சில மாணவர்களின் விசா விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கு காரணம் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ளாதது ஒரு காரணம். மேலும் நே‌ர்முக‌த் தே‌ர்‌வி‌ன் போது உண்மைக்கு மாறாக பிறர் சொல்லித்தந்ததை சொல்வதும் மற்றொரு காரணம். முதலில் எந்த நிறுவனத்தில் படிக்க வேண்டும். அங்கு படிக்க கட்டணம் மற்றும் செலவு எவ்வளவு ஆகும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுங்கள். நே‌ர்முக‌த் தே‌ர்‌வி‌ல் உண்மையை அதுவும் உங்கள் கருத்தை கூறுங்கள். ஒவ்வொரு மாணவரின் 10 கை விரல் ரேகைகளும் தூதரகத்தில் பதிவு செய்யப்படும். அதனால் பெயர் மாற்றம் செய்து மறு முறை விண்ணப்பித்தாலும் உங்கள் கை ரேகை காண்பித்து கொடுத்துவிடும். போ‌லி தரகர்களை நம்ப வேண்டாம் எ‌ன்று டேவிட் ஹாப்பர் கூ‌றினா‌ர்.

மேலு‌ம், இ‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல், அமெ‌ரி‌க்கா‌வி‌‌ற்கு செ‌ல்வத‌ற்கான ‌விசா‌வி‌ற்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் கைரேகை எ‌வ்வாறு பதிவு செய்யப்படுகிறது, நே‌ர்முக‌த் தே‌ர்வு எ‌வ்வாறு நடைபெறு‌கிறது எ‌ன்பது பற்றிய நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.


Share this Story:

Follow Webdunia tamil