எதற்காகக் குடியுரிமைப் பணி ?
(Civil Services - Scope and Prospects)
நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants).
இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இன்று உலகமயமாக்கம் (Globalisation) தாராளமயமாக்கம் ஆகியவை பரவலாக்கப்பட்ட சூழலில் குடியுரிமைப் பணிகளின் முக்கியத்துவம் உண்மையில் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். வருடாவருடம் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.
குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாமே!
பணிகள்
மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.
i.) Indian Administrative Service (I.A.S.)
ii.) Indian Foreign Service (I.F.S.)
iii.) Indian Police Service (I.P.S.)
iv.) Indian P&T Accounts & Finance Service Group - A
v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A
vi.) Indian Customs and Central Excise Service - GP-A
vii.) Indian Revenue Service GP-A
viii.) Indian Ordinance Factories Service GP-'A'
ix.) Indian Postal Service - GP - 'A'
x.) Indian Civil Accounts Service GP-'A'
xi.) Indian Railway Traffic Service GP-'A'
xii.) Indian Railway Accounts Service GP-'A'
xiii.)Indian Railway Personal Service GP-'A'
xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force
xv.) Indian Defence Estates Service, GP-A
xvi.) Indian Information Service (Junior Grade) GP-A
xvii.) Indian Trade Service GP-A
xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force
xix.) Central Secrateriat Service GP-B
xx.) Railway Board Secretariat Service GP-B
xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B
xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B
xxiii.) Pondicherry Police Service, Group - B
செலவு அதிகமாகுமா?
ஐ.ஏ.எஸ். படிக்க பணம் நிறைய வேண்டுமே! ஏகப்பட்ட செலவாகுமே! எங்களுக்கு முடியுமா? என்று தன்னிரக்கப்படுபவர்களுக்கு சிவில் சர்வீஸஸ் எழுத UPSC வசூலிக்கும் கட்டணம் மிகவும் குறைவு. நாம் எப்போதுமே வாங்குகிற செய்தித்தாள், மாதம் மூன்று, நான்கு முக்கியப் பத்திரிகைகள், சில புத்தகங்கள், முக்கியமான சில நோட்டீஸ்கள் எல்லாம் சேர்த்து ரூ. 5000/- போதும். இன்னும் கொஞ்சம் தாராளமாக இருந்தால் 10,000/- போதும்.
இந்த தொகையைக் கூட அரசு அளிக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் ஊக்கத்தொகையிலேயே ஈடுகட்டிவிடலாம்.
ஒரு நல்ல நூலகத்தைத் தேர்ந்தெடுத்து புத்தகங்களை தேர்வு செய்வதன் மூலம் தகவல்களை திரட்டலாம். எல்லாப் புத்தகங்களையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு சில புத்தகங்கள் விரல் நகங்களைப் போல வேண்டியவை. விழியிமைகளைப் போல தேவையானவை. உதாரணத்திற்கு வேளாண்மையை விருப்பப் பாடமாகக் கொண்டவர்கள் வேளாண்மைக் கையேடு (Hand Book of I.C.A.R.) நிச்சயம் வாங்க வேண்டும்.
4 நண்பர்களுக்கு மிகாமல் குழு அமைத்துப் (ழுசடிரயீ ளவரனல) படிப்பதன் மூலம் சில புத்தகங்களையும் , கைடுகளையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம் (Exchange)
எவ்வளவு ஆண்டு தயாரிப்பு?
கல்லூரியிலிருந்தே இத்தேர்வுக்குத் தயார் செய்பவர்கள் கூட ஒரு வருடகாலம் படிப்பு முடிந்ததும் இந்த தேர்வுக்காக ஒதுக்கி முழு மூச்சாகத் தயாரிப்பது நல்லது.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் இந்தத் தேர்வை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுபவர்கள் இரண்டு வருடங்களாக மும்முரமாகப் படித்துத் தேர்வை எழுதுவது முதல் முறையிலேயே ஏதேனும் ஒரு பணியில் சேர உதவலாம்.
ஒரு நாளைக்குப் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் படிக்க வேண்டும். அதற்குக் குறைவாகப் படிப்பவர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாது. நல்ல தயாரிப்பு நமக்குத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் அதிகப்படியான உந்து சக்தியையும் அளிக்கும்.
எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல; எவ்வளவு தீவிரமாகப் படிக்கிறோம் என்பது தான் அவசியம். அந்த நொடியில் முழுவதுமாகத் தன்னை அந்த பணியில் கரைத்துக் கொள்வதே படிப்பு.
கோச்சிங் குறித்து
இப்பொழுது குடியுரிமைப் பணிகள் "pickup" ஆவதைப் பார்த்ததும், அது "Latest Trend" என்று அறிந்து பலர் கோச்சிங் ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் நடத்தும் பயிற்சியும் பார்வையற்றவர்கள் யானையைத் தடவிய மாதிரி இருக்கின்றது.
எல்.கே.ஜி முதல் ஐ.ஏ.எஸ் வரை வகுப்புகள் என்று சில வரிசை வீடுகளின் நெற்றியில் பெயர்ப்பலகைத் தொங்குவதைப் பார்க்கலாம். பரபரப்பாகப்
பேசப்படும் நடிகரை வைத்துப் படம் செய்வதைப் போலத்தான் இதுவும்.
· முதலில் இத்தேர்வுக்கு யாரும் பயிற்சியளிக்க முடியாது. வேண்டுமானால் வழிகாட்டலாம். என்ன படிக்கலாம்? எந்தெந்தப் புத்தகங்கள் வாங்கலாம்; எப்படிப் படிப்பதை ஒழுங்குபடுத்தலாம் என நமக்குச் சுட்டுவிரலை நீட்ட மட்டுமே பிறரால் முடியும்.
· கோச்சிங் போனால் தேர்வாகிவிடலாம் என்ற நெருப்புக் கோழி பார்வையிலிருந்து விடுபட வேண்டும். கோச்சிங் போய் தோல்வியுற்றவர்கள் சதவிகிதம் வெற்றி பெற்றவர்கள் சதவிகிதத்தைவிட அதிகம்.
· இந்நிறுவனங்கள் தரும் குறிப்புகளை வழிகாட்டுதலுக்காக மட்டும் ஒருமுறை புரட்டுவது நல்லது. அவற்றையே நம்பி இருப்பது மின்மினிப் பூச்சியின் வெளிச்சத்தில் படிக்க நினைப்பது போல.
· இது போன்ற நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் மற்றவர்களைப் பார்த்துக் குழம்பி விடுவது உண்டு. அவர்கள் தோற்றமும் தோல் நிறமும் நமக்கு ஒருவித Complex-I ஏற்படுத்துவதும் உண்டு.
தோல்விக்குக் காரணங்கள்
இந்தத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் ஏன் தோல்வியுறுகிறார்கள் என்பதையும் உற்று நோக்க வேண்டும்.
· அடிப்படையான ஆர்வமும், போதுமான தேடலும் இல்லாதவர்கள்.
· இந்தத் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியில்லாதவர்கள் (புலியைப் பார்த்த பூனைகள்).
· மற்ற தேர்வுகளைப் போல தேர்வு அன்றைக்கு மட்டும் புத்தகங்களைப் புரட்டிவிட்டுச் செல்பவர்கள்.
· பிரிலிமினரி தேர்வானதும் ஐ.ஏ.எஸ். ஆஃபிஸரானதைப் போல காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நடப்பவர்கள்.
· இத்தேர்வையும் வேலை வாய்ப்பு தேடும் இன்னொரு களமாகக் கருதிக் கொள்பவர்கள்.
· கல்லூரித் தேர்வு அணுகுமுறை.
· எளிய முறையில் / குறுக்கு வழியில் இத்தேர்வை அணுகமுடியுமா என எதிர்பார்த்து அவற்றில் சக்தியை இழப்பவர்கள்.
· முதல் முறை தோல்வியடைந்ததும், மரவட்டை குச்சியால் குத்தியதும் சுருங்குவது போலத் தன்னைச் சுருக்கிக் கொள்பவர்கள்.
· தன் தோல்விக்கான காரணங்களை அலசி அவற்றை சரி செய்து கொள்ளாதவர்கள்.
· ஒவ்வொரு முறையும் விருப்பப்பாடங்களை விருப்பம் போல மாற்றுபவர்கள்.
· விருப்பமில்லாத பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பவர்கள்.
· சரியான யுக்திகளுடன் அணுகாமல் வெறுமனே கடின உழைப்பு உழைப்பவர்கள்.
தமிழில் எழுத சில தடைகள்
· நான் ஆங்கில மீடியத்தில் படித்தேன். எனக்குப் பாடங்களெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே பரிச்சயம் என்று சொல்பவர்கள் தமிழில் எழுதினால் ஒருவேளை இனமான உணர்வினால் அதிக மதிப்பெண்கள் கிடைக்குமோ என எண்ணித் தமிழில் எழுத வேண்டியதில்லை.
· தங்கள் பட்டப்படிப்பைத் தமிழிலேயே படித்தவர்கள், தமிழ் தனக்கு ஆங்கிலத்தைக் காட்டிலும் சரளம் என்கிற தன்னம்பிக்கை மேலிடுகிறவர்கள் மட்டும் தமிழில் இத்தேர்வை எழுதலாம்.
· நான் படித்த பாடம் என் விருப்பப் பாடமல்ல, நான் புதிய பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கப்போகிறேன் அதைப் படிக்க எனக்குத் தமிழ் வசதியான மொழி என எண்ணுபவர்கள் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.
· தமிழ் ஊடகமாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கவோ, அதனால் மட்டுமே மதிப்பெண்கள் குறையவோ வாய்ப்பு இல்லை. நம்முடைய ஞநசகடிசஅயnஉந மட்டுமே மொழியைத் தாண்டி தகுதியை நிர்ணயிக்கும்.
· தமிழில் எழுதினால் கேள்வித்தாள்கள் தமிழில் இருக்குமா? இது ஒரு கேள்வி. கேள்வித்தாள்கள் ஆங்கிலம் / இந்தி மொழிகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. கேள்வியைப் புரிந்து கொண்டு நாம் விடையைத் தமிழில் எழுத வேண்டும்.
· தமிழில் எழுதுவதாக இருந்தால் ஆயவநசயைடள தமிழில் கிடைக்குமா? தமிழில் பொது அறிவுக்கும் வேறு சில விருப்பப்பாடங்களுக்கும் குறிப்புகள், உபகரணங்கள் கிடைப்பது மிகவும் சிரமம். ஆங்கிலத்தில் தான் அதிகமான பொருட்கள் கிடைக்கும். ஏனென்றால் விற்பனை பெரும்பான்மையைக் குறிவைத்து தான் நிகழ்த்தப்படும். எனவே ஆங்கிலத்தில் உள்ள தகவல்களை நாம்தான் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ள வேண்டும். மொழி பெயர்க்க முடியாத சில பதங்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுதவும் செய்யலாம். தமிழில் எழுதுவது எளிது அல்ல; அதற்கு நிறைய உழைப்புத் தேவை.
ஆங்கில அறிவு அவசியமா?
ஆங்கில அறிவே பிரதானம் என்ற கூற்றுக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்ற வாக்கியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை நாம் ஒருகாலும் மறுதலிக்க முடியாது. தமிழ் குறித்து நாம் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டாலும், பல இடங்களில் ஆங்கிலத்தின் மூலம் தான் தொடர்ப்பு கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
சரியாக ஆங்கிலம் தெரியாது எனச் சொல்வது ஒரு விதமான முயற்சியின்மையின் வெளிப்பாடுதான். தொடர்ந்து வாசிப்பதன் மூலமும் எழுதுவதின் மூலமும் மற்றவர்களுடன் பேசுவதன் மூலமும் தான் ஆங்கில அறிவை விருத்தி செய்ய முடியும்.
Language is the functioning of our subconscious mind. மொழி நம் ஆழ்மனச் செயல்பாட்டின் வெளிப்பாடு. நாம் நம் தாய்மொழியில் / பரிச்சயமொழியில் பேச யோசிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் அது நம்மில் ஓர் அங்கம்.
தினமும் ஆங்கிலத் தினசரிகளை வாசிப்பது. வார்த்தை திறன் (Vocabulary) வளர்க்க உதவும் புத்தகங்களை வாசிப்பது. தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்திகளைக் கேட்டல், மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகுதல், ஒரு தனியறையில் அமர்ந்து ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசிப் பார்ப்பது. அதைப் பதிவு செய்து திரும்பக் கேட்டு எந்த இடத்தில் தவறி இருக்கிறோம் எனப் பரிசீலனை செய்வது. வார்த்தை திறனில் குறைவா, வாக்கிய அமைப்பில் பிரச்சனையா எனக் கண்டறிதல் போன்றவை மொழியறிவை வளர்க்க உதவுகிற உத்திகள்.
இந்தியக் குடிமகன்கள் மட்டும்தான் எழுத முடியுமா?
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளை அடைய விரும்புகிறவர்கள் இந்தியப் ப்ரஜா உரிமை (Citizen of India) பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு நேபாளத்திலும், பூடானிலும் குடியுரிமை பெற்றவர்களும், திபெத்திலிருந்து 01.01.1962 க்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்து இங்கு நிரந்தரமாகக் குடியேறியவர்களும், இந்தியாவில் பூர்வீகம் இருந்து பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் நிரந்தரமாகக் குடியேறியவர்களும் கூட எழுதத் தகுதி பெற்றவர்கள்தாம்.
வயது வரம்பு
ஒவ்வொரு வருடமும் Employment News செய்தித்தாளில் நவம்பர், டிசம்பர் மாதவாக்கில் இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது.
2002ம் வருடம் 15.12.2002 நாளிட்ட Employment News இதழில் இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குறைந்த பட்ச வயது :
அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி 21 வருடங்கள் நிரம்பப் பெற்றவர்கள்தான் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதிக பட்ச வயது :
குடியுரிமைத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு என்ன என்பதுதான் மிகவும் முக்கியமான தகவல். அதை வைத்துத்தான் நம்முடைய இலக்கையும் தீவிரத்தையும் தீர்மானிக்க முடியும்.
பொதுப்பிரிவினருக்கு இத்தேர்வை எழுத 30 வருடங்கள் 1-08 (1st August is the cut off date) வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறை (CISF-Asst. Commandent (GP-A) பணிக்கு மட்டும் பொருந்தாது. அதற்கு அதிகபட்ச வயது 28 ஆண்டுகளாகும்.
வயது வரம்பு தளர்வு (Age Relaxation) :
அதிக பட்ச வயது வரம்பில்
1. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 5 வருடங்கள் வயது நீட்டிப்பும்.
2. இதரப் பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 3 வருடங்கள் வயது நீடிப்பும்.
3. 1980 முதல் 1989 வரை ஜம்மு-காஷ்மீரில் தங்கியிருந்தவர்களுக்கு 5 வருடம் அதிகப்படி அவகாசமும்.
4. பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு போர்களில் அங்கஹீனம் அடைந்தவர்களுக்கு 3 வருடங்கள் காலத்தளர்வும்.
5. (பாதுகாப்புப் பணியில்) முன்னாள் ரணுவத்தினருக்கு மேலும் 5 வருடங்கள் அவகாசமும்.
6. பார்வையற்றவர்கள், காதுகேளாதோர், உடல் ஊனமுற்றோர் (Blind, Demute and Orthopaedically Handicapped person) ஆகியோருக்குப் 10 வருடங்கள் காலநீடிப்பும் தரப்பட்டுள்ளன.
டிப்ளமோ படித்திருந்தால் எழுதலாமா?
Diploma. படித்திருந்தால் எழுத முடியாது. குறைந்த பட்ச தகுதி-பட்டப்படிப்பு ஆகும்.
கல்வித்தகுதி - திறந்தவெளி கல்வி முறை செல்லுமா?
திறந்தவெளி கல்வி முறையில் படித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியுமா? என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இது குறித்து U.G.C. University Grants Commission தெளிவுபடுத்தியுள்ளது. எனவே Open University மூலம் படித்தவர்களும் தைரியமாக விண்ணப்பிக்கலாம்.
எத்தனை முறை எழுதலாம்?
(Number of Attmpts)
பொதுப்பிரிவில் போட்டியிடுபவர்கள் 4 முறையும், (Open Category) இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7 முறையும் (OBC Category) தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு வரம்பின்றியும் (SC/ST Category) இந்தத் தேர்வு எழுத வரையறைகள் உள்ளன.
தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் வரம்பின்றி (No restriction on the number of attempts) எழுத முடியும். என்றாலும் அவர்கள் வயது வரம்புக்குட்பட்டு 21 முதல் 35 வருடங்கள் வரை 14 முறை எழுத வாய்ப்புகள் உண்டு.
இது குறித்து அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்கள்.
· முதன்மைத் தேர்வு எழுதாமலிருந்தால் அது Attempt ஆகக் கருதப்படுமா?
கருதப்படமாட்டாது.
· முன்னேற்றம் (Latest Development) பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகத் தேர்வில் முக்கியமான செய்திகளை (Important Points) வரிசையாகப் பிழையின்றி எழுதினால் போதும். ஆனால் போட்டித் தேர்வில் நாம் எவ்வளவு அதிகப்படியான புதிய செய்திகளைத் தருகிறோம் என்பது நம் வெற்றியை விரைவு படுத்தும்.
திட்டமிடுதல்
(When to Plan for this Exam?)
பத்தாவது படித்து முடித்தவுடனேயே +2வில் Civil services தேர்வுக்குத் தகுந்தவாறு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து இத்தேர்வுக்குத் தேவையான அணுகுமுறையுடன் படிக்க ஆரம்பித்தால் மிகவும் எளிதாக நாம் வெற்றி பெற முடியும். இப்பொழுதுள்ள போட்டிச் சூழலில் இதுபோன்ற திட்டமிட்ட அணுகுமுறை நம் வெற்றியை எளிதாக்கவும், விரைவாக்கவும் அவசியம்.
+2 சேரும்போதே இப்படிப்பட்ட எண்ணம் இல்லாதவர்கள் மருத்துவம் / பொறியியலைத் தவறவிட்டவர்கள் கல்லூரி சேரும்போதாவது இந்த இலக்கைத் தீர்மானித்து அதற்கேற்றவாறு விருப்பப் பாடத்தை எடுப்பது நல்லது. கல்லூரி சேர்ந்த முதல் நாளிலிருந்தே இத்தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு அதற்கும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் ஒதுக்குவது நல்லது.
முன்னேற்றத்திற்கு மூன்று படிகள்
(3 Steps in civils)
இத்தேர்வு Preliminary, Mains, Personality test என்ற மூன்று படிகளைக் கொண்டது என ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களைத் கொண்டது.
1. முதல் தாள் - விருப்பப் பாடம் - Optionals - 300 மதிப்பெண்கள்
2. இரண்டாம் தாள் - பொது அறிவு - General Knowledge - 150 மதிப்பெண்கள்
முதன்மைத் தேர்வு சரியான விடையைத் தெரிவு செய்தல் (Multiple Choice) அடிப்படையில் அமைந்த Objective type தேர்வு ஆகும்.
பிரதானத் தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது.
1. அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு.
2. ஆங்கிலம்
1, 2 ஆகிய தாள்கள் தகுதி பெறுவதைத் தீர்மானிக்கின்ற தாள்கள் முதல் தாளைக் பொருத்தவரைப் பெரும்பாலும் தமிழ்நாட்டில் தமிழே தேர்வு மொழியாக இருக்கின்றது.
ஒரே நாளில் காலை, மதியம் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தகுதியறியும் (Qualifying Papers) தேர்வுகளாக இருப்பதால் இவற்றில் தேர்ச்சி பெற்றால் தான் ஒருவருடைய மற்ற தாள்கள் திருத்தப்படுகின்றன. இவற்றில் பெறுகின்ற மதிப்பெண்கள் ரேங்கிங் செய்யக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
மதிப்பெண்கள்
3. பொது அறிவு முதல், இரண்டாம் தாள்கள் - 2 x 300 = 600
4. (General Studies I & II Papers)
5. விருப்பப் பாடம் 1 முதல், இரண்டாம் தாள்கள் - 2 x 300 = 600
6. First Optionals - I & II Papers
7. விருப்பப்படம் 2 முதல், இரண்டாம் தாள்கள் - 2 x 300 = 600
8. First Optionals - I & II Papers
9. பொதுக் கட்டுரைத்தாள் - I (General Essay) - 1 x 200 = 200
மதிப்பெண்கள் --------------------------------- 2000
பிரதானத் தேர்வு வினாக்களுக்கு விடை எழுதுகிற வடிவத்தில் (Subjective Type) நடத்தப்படுகின்ற தேர்வு.
இந்த 9 தாள்களில் 3 முதல் 9 வரையுள்ள தாள்களில் பெறுகிற மதிப்பெண்களை வைத்து வரிசைப்படுத்தி ஆளுமைத் தேர்வுக்கு அழைக்கிறார்கள்.
ஆளுமைத் தேர்வு (Personality test) புதுடில்லியில் நடத்தப்படுகிறது. அதற்கு 200 மதிப்பெண்கள் உள்ளன. ஆளுமைத் தேர்வுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எதுவும் கிடையாது. (No Minimum qualifying marks)
பிரதானத் தேர்வு மதிப்பெண்ணும், ஆளுமைத் தேர்வு மதிப்பெண்ணும் கூட்டப்பெற்று இறங்கு வரிசையில் பட்டியலிடப்பட்டு காலியிடங்களுக்கு ஏற்றவாறு வெற்றி பெற்றவர்கள் விபரம் பட்டியலிடப்படுகிறது.
1. ஒருவர் பெற்ற ரேங்க் (Rank)
2. காலியிடங்கள் (Vacancy position)
3. அவருடைய பணிவிருப்பம் (Option given regarding the service)
ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டுகிறது. அதிலும் அவருடைய சுயமே மற்றும் சொந்த மாநில காலியிடம் ஆகியவை அவர் பணியாற்ற உள்ள மாநிலத்தை (Cadre) அகில இந்தியப் பணிகளான (IAS, IPS) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் முடிவு செய்கின்றது. எனவே ஏறத்தாழ ஏழு மலைகளைக் கடந்த பொந்துக்குள் இருக்கும் மந்திரவாதி உயிர்போலத்தான் இதுவும்.
விருப்பப் பாடம்
(Selection of Optionals)
முதன்மைத் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட விருப்பப்பாடங்களை முதலில் பட்டியலிடலாம்.
1. வேளாண்மை
2. கால் நடைப் பராமரிப்பு
3. தாவரவியல்
4. வேதியியல்
5. சிவில் இஞ்சினியரிங்
6. வணிகம்
7. பொருளாதாரம்
8. மின்பொறியியல்
9. புவியியல்
10. பூகோளவியல்
11. இந்திய வரலாறு
12. சட்டம்
13. கணிதம்
14. மெக்கானிக்கல் இஞ்சினியரிங்
15. மருத்துவ அறிவியல்
16. தத்துவம்
17. இயற்பியல்
18. அரசியல்
19. மனவியல்
20. பொது நிர்வாகம்
21. சமூகவியல்
22. புள்ளியியல்
23. விலங்கியல்
எது விருப்பப்பாடம்
· விருப்பப் பாடம் முதலில் நாம் விரும்புகிற பாடமாக இருக்க வேண்டும். நமக்கு எட்டிக்காயாக கசக்கிற ஒரு பாடத்தை அதிக மதிப்பெண்கள் பெறலாம் என எண்ணித் தேர்ந்தெடுத்தால் அஜீரணமாகிஅவஸ்தப்படுத்தும்.
· விருப்பப் பாடத்தை நாம் நன்றாகக் பரிசீலித்துப் பின்னர் தேர்ந்தெடுக்க வேண்டும். அவசரப்பட்டு யாரோ சொன்னதை வைத்தோ, கேள்வி ஞானத்தை வைத்தோ (Hear Say) தேர்ந்தெடுப்பது பலனைத்தராது.
· முதன்மைத் தேர்வுக்கும், பிரதானத் தேர்வுக்கும் தேர்ந்தெடுக்கும் பொது விருப்பப்பாடம் - முதல் விருப்பப்பாடம் (Main Optionals) என அழைக்கப்படுகிறது.
விருப்பப்பாடத்தை பொறுத்தவரை நாம் ஏற்கனவே இளங்கலை, நிறைகலை ஆகியவற்றில் படித்த பாடத்தை முதல் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. அது நாம் தயாரிக்கும் உழைப்பை பாதியாகக் குறைக்க உதவும்.
· தான் பட்டப்படிப்பில் தேர்ந்தெடுத்த அறிவியல் பாடம் தனக்கு மனநிறைவைத் தரவில்லை என்றால் வேறொரு பாடத்தை
- ஆர்வம்
- ஏற்கனவே உள்ள பாட ஞானம்
- Exposure
ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
· உதாரணமாக இள அறிவியல் வகுப்பில் இயற்பியல் படித்த ஒருவர், தான் இயற்பியல் எடுத்துப் படிப்பது சிரமம் என நினைத்தால் அவர் தனக்கு விருப்பமான, பரிச்சயமான, ஆர்வமான பாடம் வரலாறு என நினைத்தால் அதை எடுக்கலாம்.
தேர்வு செய்யும் முன்
· பாடத்திட்டம்
· 10 ஆண்டு பழைய கேள்வித்தாள் போன்றவற்றைப் படித்து பின்னர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
· இந்தத் தேர்வில் அந்த குறிப்பிட்ட விருப்ப பாடத்தத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றவர்களைக் கலந்தாலோசித்தும், நூல்களை எளிதாக எடுத்துப் படிக்க வாய்ப்புள்ள பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
· இரண்டாவது விருப்பப் பாடத்தையும் முதல் விருப்பப் பாடத்திற்கு அனுசரிப்பது போல ஆர்வம், ஏற்கெனவே படித்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
· இரண்டாவது விருப்பப்பாடமாக, தூக்கிவிடாவிட்டாலும், தொய்வடையச் செய்யாத பாடமாகத் தேர்ந்தெடுக்கலாம்.
· இலக்கியத்தைத் தெரிவு செய்பவர்கள் அந்த மொழியில் பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பரிச்சயம் உள்ளவராகவும், பழங்கால இலக்கிய வாசிப்பு உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
· அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களை அதில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே எடுத்தாள முடியும். கலைப் பாடங்களை மற்றவர்களும் எடுத்துப் படிக்கலாம்.
· கணினியியல் போன்ற பாடங்கள் படிப்பவர்கள் தங்கள் படிப்பை விருப்பப்பாடமாக எடுக்கச் சாத்தியக்கூறு இல்லை.