வறுமையில் இருக்கும் இளையோரை மேம்படுத்தி, பயிற்சி அளிக்க ஆயத்த ஆடைகள் வடிவமைப்பு மையம் அமைக்க, திருச்சி, பாரதிதாசன் மகளிரியல் மையத்துக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐ.எஸ்.எப்.எஸ் அனுமதி அளித்துள்ளது.
ஜூன் 2வது வாரத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக மகளிரியல் மைய இயக்குநர் மணிமேகலை தெரிவித்தார்.
ஜூலை மாதத்தில் இநத் பயிற்சிகள் தொடங்க இருப்பதாகவும், செப்டம்பரில் முழுமையாக பல்கலைக் கழக வளாகத்தில் பயிற்சி மையம் இயங்க உள்ளதாகவும், இம்மைய அடிப்படை வசதிகளுக்காக ரூ.29 லட்சம் ஒதுக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.