Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பகுதிநேர பிஹெச்டி: விரைவில் புதிய முறை!

பகுதிநேர பிஹெச்டி: விரைவில் புதிய முறை!
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:28 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்புகளில் (பி.ஹெச்.டி.) விரைவில் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்வதற்கு, அதன் கல்விக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்திர கல்விக்குழு கூட்டம், துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வறுமாறு:

பகுதி நேர ஆராய்ச்சி வகுப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் 'நெட்' எனப்படும் தேசியத் தகுதி காண் தேர்விலும், 'ஸ்லெட்' தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அல்லது எம்.பில். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருப்பது, பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்காக கட்டாயத் தகுதியாகிறது.

வரும் ஜனவரி மாதம் முதல் எண்டர்பிரைசஸ் கம்ப்யூட்டிங், ரிமோட் இன்பர்மேட்டிங் மேனேஜ்மென்ட் ஆகிய ஒரு வருட பட்டயப்படிப்பு, விமானப் பணிப்பெண், விமானப் பணியாளர் தொடர்பான பட்டயப் படிப்பு, இயற்கை வைத்தியம் மற்றும் யோகா அறிவியல் என புதிய பாடங்களை சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil