Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

23, 25-ஆம் தேதிகளில் எம்பிஏ கலந்தாய்வு!

23, 25-ஆம் தேதிகளில் எம்பிஏ கலந்தாய்வு!
, வெள்ளி, 18 ஜூலை 2008 (17:24 IST)
சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ. பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடப்பு 2008- 09 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ. பாடத்தில் சேர தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல், பல்கலைக் கழக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.பி.ஏ. ரெகுலர் பாடப் பிரிவிற்காக கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதியும், எம்.பி.ஏ. செல்ப் சப்போர்டிவ் பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதியும் தொடங்கும் என்று, சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil