கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ., பி.டெக். பட்டப் படிப்பிற்காக கல்விக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்படுவதாக, துணைவேந்தர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு பி.இ., பி.டெக். பாடப் பிரிவுக்கு 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், இவ்வாண்டு இது 25 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தற்போது கட்டணக் குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
மூன்றாண்டு பி.இ., பி.டெக். பாடத்தில் சேருவதற்கு வரும் 25-ம் ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற ராதா கிருஷ்ணன், இதுவரை 1,100 பேர் மனு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வரும் 31-ம் ஆம் தேதி முதல் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கவிருப்பதகா அவர் மேலும் கூறினார்.