இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
இது குறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 2009 மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலாளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையம் என்ற பெயரில் வரைவோலை (டி.டி) எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய,
பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையம்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7.
044-26618056, 26618161 என்ற முகவரியில் அணுகலாம்.