Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவில் என்ஜினீயரிங் பட்டயப் படிப்பு

சிவில் என்ஜினீயரிங் பட்டயப் படிப்பு
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், சிவில் என்ஜினீயரிங் பட்டயப் படிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து அதன் சென்னை மண்டல மையத்தின் இயக்குநர் டி.ஆர். ஸ்ரீநிவாசன் கூறுகை‌யி‌ல், பொறியியல் துறையினைச் சார்ந்த கட்டுமானத் துறையில் ஒரு பட்டயப் படிப்பாக டிப்ளமோ இன் சிவில் என்ஜீனியரிங் படிப்பு தொடங்கப்படுகிறது.

10-ம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்க‌ள் அல்லது மேலு‌ம் 2 ஆண்டுகள் கட்டுமானத் தொழிலக அனுபவம் பெற்றவர்களு‌ம் இ‌ந்த ப‌ட்டய‌ப்படி‌ப்‌பி‌ற்கு விண்ணப்பிக்க தகு‌தியானவ‌ர்க‌ள்.

இதுதவிர பிளஸ் 2 பாடப் பிரிவில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களோ அல்லது ஐடிஐ-ல் முதற்படி வரைகலை படிப்பில் (டிராஃப்ட்ஸ்மேன்ஷிப்) முதன்மைப் பாடமாக எடுத்து சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவோரு‌ம் விண்ணப்பிக்கலாம்.

பொது அல்லது தனியார் சார்ந்த கட்டுமான நிறுவனங்கள், இதுபோன்ற தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுவோரும் இப்படிப்பில் சேரலாம்.

வரும் ஜூலை முதல் துவ‌ங்கு‌ம் இப்படிப்பின் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சென்னை மண்டல அலுவலகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600113.

மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. எண் 044-22541919. இ‌க்னோசெ‌ன்னை.ஏ‌சி.இ‌ன் எ‌ன்ற இணையதள முகவ‌ரி‌யிலு‌ம் ‌விவர‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil