ஐ.ஐ.டி. கல்விக் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்த அரசு அனுமதியளித்துள்ளது. இது குறித்த சி.என்.ஆர். ராவ் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றது.
ஐ.ஐ.டி.யின் பி.டெக் மற்றும் எம்.டெக் கல்விகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.25,000த்திலிருந்து ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. நிறுவனத்தை நடத்தவும், பெருகி வரும் செலவினங்களை சமாளிக்கவும் இந்த கட்டண உயர்வு அவசியம் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த புதிய கட்டண முறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் கட்டணங்களும் அதிகரிக்கப்படலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.