திட்டமிட்டு படிக்கும் மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். எளிதான பாடங்களை முதலில் படிப்பது அவசியம். அதனால் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான மதிப்பெண்களை எடுத்துவிட முடியும். பிறகு, ஓரளவு கடினமான பாடங்களில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்களை எடுக்கலாம்.
பின்வரும் குறிப்புகளை முறையாக பின்பற்றி தேர்வுக்கு தயாராகின்றவர்கள் மதிப்பெண்களை அள்ளமுடியும்.
படித்ததை எழுதிப்பாருங்கள். அதனால் பிழைகளை திருத்திக்கொள்ளவும், புரிந்து படிக்கும் திறனை அதிகரிக்கவும் முடியும்.
மனப்பாடம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். எபோதும் புரிந்து படிக்கவே முயற்சி செய்யுங்கள்.
படித்தவற்றை அடிக்கடி ஞாபகத்திற்கு கொண்டுவாருங்கள். இதற்காக தினமும் அரை மணிநேரத்தை ஒதுக்கிகொள்ளுங்கள்.
மாதிரி வினாத்தாள்களை வாசித்து, அவற்றில் எந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்பதை கண்டறியுங்கள். அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதற்கான வழிமுறைகளையும் ஆராயுங்கள்.
கணிதம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கும்போது மறக்காமல் அதற்கான சூத்திரத்தையும் குறிப்பிடுங்கள்.
எடுத்துக்காட்டு கணக்குகளுக்கு சுயமாக விடை காண்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறீர்கள் என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.
log & antilog சம்பந்தப்பட்ட கணக்குகளில் பலமுறை பயிற்சி எடுங்கள்.
இயற்பியல், வேதியியல் பாடங்களில் வரும் சூத்திரங்களை பட்டியலிடுங்கள். அவற்றை உங்களது அறையின் சுவற்றில் மாட்டிவைங்கள்.
பாடங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் குறிப்பிட்ட ஒரு உதாரணத்தை கொண்டு ஞாபகத்தில் நிறுத்துங்கள். அப்போது எளிதாக படிக்க முடியும்.
பாடத்தை முழுவதுமாக படித்த பிறகு, மாதிரி வினாத்தாள்களை கொண்டு நீங்களே தேர்வு எழுதிப்பாருங்கள்.
கேள்விக்குரிய அனைத்து குறிப்புகளையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.