Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஒரு சாமானியனின் கடிதம்

Dinesh
புதன், 13 ஜூலை 2016 (13:56 IST)
ஐ.எஸ் பயங்கரவாதிகளே, ஈவு இரக்கமற்ற, கல் நெஞ்சம் கொண்ட உங்களுக்கு என் கண்டன வணக்கம்,


 


மக்கள் அனைவரும் இறந்த பிறகு யாரை வைத்து அதிகாரம் செய்யப்போகிறீர்கள். நீங்கள் இஸ்லாமியர்களா? இல்லவே இல்லை. பயங்கரவாதமே உங்கள்  இனம், பயங்கரவாதமே உங்கள்  மதம், பயங்கரவாதமே உங்கள்  சாதி. இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் அமையும் வரை உங்கள் போராட்டம் தொடரும் என்கிறீர்கள். உங்கள் எண்ணம் சாத்தியமாகுமா? முடியாத ஒன்றை எதற்கு பிடித்து கொண்டு பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.

குர்ஆனை உலகம் முழுவதும் பின்பற்றாத இஸ்லாமியர்களை கொன்று குவிக்கிறீர்களே. அந்த குர்ஆனை நீங்கள் முழுவதும் படித்து பின் பற்றுகிறீர்களா?. உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் பொறுப்பேற்கிறீர்கள். துணிச்சல் இருந்தால் எமது அரசாங்கத்தின் முன் வந்து நேரடியாக கூறுங்கள். அதை விட்டுவிட்டு உங்கள் முகத்தை மறைத்து கொண்டு ஏதோ நாளு சுவற்றுக்குள் இருந்து கோழைத்தனமாக வீடியோவில் தோன்றுகிறீர்கள். கடவுள் பெயரால் நடத்தும் இந்த பயங்கரவாதத்துக்கு உங்கள் கடவுளே உங்களை மன்னிக்க மாட்டார். உங்களால் நன் நடத்தை கொண்டு அமைதி வழியை பின்பற்றும் இஸ்லாமியருக்கும் அவப் பெயர்.

உங்களால் மூளை சலவை செய்து உங்கள் கேவலமான இயக்கத்தில் இணைந்த பிறகு, நாம் செய்யும் செயல் தவறு என்று உணர்ந்த இளைஞர்களையும் மிக கொடூரமாக கொலை செய்யும் கல் மனம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது. அரக்கரகளை பார்த்திருக்கிறீர்களா நீங்கள், போய் உங்கள் பொத குழி கண்ணாடியில் பாருங்கள். உங்களுக்கு அன்பு கருணை இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா. முதல் போய் நல்ல மனநல மருத்துவரை பாருங்கள்.

இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் அமையும் வரை உங்கள் போராட்டம் தொடரும் என்கிறீர்கள். நீங்கள் முதல் இஸ்லாத்தை முழுவதுமாக பின் பற்றுங்கள், உங்கள் துப்பாக்கி கீழ் இருக்கும் குர்ஆனை தூசி தட்டி படியுங்கள்.

இனியும், உங்கள் பயங்கரவாதம் தொடரும் என்றால். உங்கள் அமைப்பும், உங்கள் அரக்கர்களும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகட்டும். இது, உங்களால் இறந்த அப்பாவி மக்களின் சார்பாக நான் கொடுக்கும் சாபம்.

- Dinesh
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

$100 பில்லியன் மதிப்பு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்: என்ன காரணம்

சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!

கட்சி தொடங்கிட்டு.. தனி விமானத்துல நடிகை கூட சுத்திக்கிட்டு..! - விஜய்யை விமர்சித்த லியோனி!?

அடுத்த கட்டுரையில்
Show comments