Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாவராத்திரி வழிபாட்டில் அம்பாளின் 9 வடிவங்கள்...!

நாவராத்திரி வழிபாட்டில் அம்பாளின் 9 வடிவங்கள்...!
அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிப்பட்டாலும், அவற்றுள் மிக முக்கியமாக நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம  நூல்கள் கூறுகின்றன.
துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை,  சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியவையாகும்.
 
சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி  ஆகியவையாகும்.
 
லட்சுமியின் அமசங்களாக (அஷ்ட லட்சுமி): ஆதி லட்சுமி, மாக லட்சுமி, தன இலட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகியவையாகும்.
 
இவ் நவராத்திரி விழாவின்போது ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும்ம் இல்லங்களிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம். அத்துடன் கும்பத்தை மையப்படுத்தி கொலுவைத்தும் வழிபடுவார்கள்.   கொலு வைக்கும் வழக்கம் இந்தியாவில் பிரபலமானது.
 
முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலை யாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர  ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாசுரனைக் கொன்ற மகா துர்க்கையாகவும், எட்டாவது தினத்தில் மகிஷாசுரனைக் கொன்ற மகா லட்சுமி  ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்களைக் கொன்று உலகத்தை காத்த மகாசரஸ்வதி யாகவும் அம்பாளை  வழிபடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகாசனம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன...?