Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரனின் பலம் பெற சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது ஏன்...?

Advertiesment
Chaturthi
, திங்கள், 27 ஜூன் 2022 (15:55 IST)
விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான்.


முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பின் தான் கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுவான நியதி.

அடக்கமின்றி தன்னை பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சதுர்த்தி அன்று, காலையில் குளித்து விட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும்  பிள்ளையாரை 11 முறை வலம் வரவேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரை ப் பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமானவர். வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதியை நீராட்டி வணங்குவது நமது தொன்று தொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது. 'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப்பிள்ளையாரை  வணங்கினால் தீராத வினையெல்லாம் தீரும்' என்பார்கள்.  

ஒருமுறை பிரம்மனால் தொழுநோய் பெற்ற நவகிரகங்கள், கணபதியை பூஜித்து குணம் பெற்றார்கள். மனிதர்கள் மட்டுமன்றி சகல தேவர்களுக்கும் அருளியவர் கணபதிப் பெருமான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூச்சு திணறல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரும் தாளிசாதி சூரணம் !!