Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...?

Advertiesment
நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...?
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். 
 
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
 
தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும்  தெளிவாக இருக்கும்.
webdunia
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.
 
சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு  அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
 
ரத்தத்தில் கெட்ட கொழுப்பை கரைக்க, நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
 
ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால் சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ”  என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க  முழுக்க உண்மை.
 
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறை ஆகும். 
 
இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால்  சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன்  கிடைக்கும்.
 
உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை  நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம்  செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் சிறிது துளசி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள்...!!