பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸுடன் காளான் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனவாய்ப் புண் போன்றவை குணமாகும்.
காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது. காளான்களில் எல்லா வகை காளான்களையும் உண்ணக்கூடாது என்பதால் கவனம் தேவை.
காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படும். குறிப்பாக ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அந்தவகையில் இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்படும்போது வெளிப்பகுதியில் சோடியம் அதிகரிக்கும்போது சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறையும். இதனால் இதயத்தின் செயல்பாடு மாறும். இத்தகைய நிலையை சரிசெய்ய பொட்டாசியம் தேவைப்படும். காளானில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இதயக் காக்கும். 100 கிராம் காளானில் 447 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக்காலங்களில் தானாக வளரும் காளானை சாப்பிடச் சுவையாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில்தான் காளான் முளைக்கும் என்பதால் அதுவரை காத்திருக்காமல் காளானை செயற்கையாக வளர்த்தும் சாப்பிடலாம்.
100 கிராம் காளானில் புரதச் சத்து 35 சதவீதம் உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. வளர் பருவத்தில் இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.
காளானின் தாமிரச் சத்து இருப்பதால் அது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும். காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். கருப்பைக் கோளாறு உள்ள பெண்களும் குழந்தையின்மைக் குறைபாடுகளால் அவதிப்படும் பெண்களும் காளான் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் காளான் சூப் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குணமாகும்.