Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் என்ன...?

Advertiesment
வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் என்ன...?
, வியாழன், 14 ஜூலை 2022 (09:17 IST)
வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது.

வெண்டைக்காயும்  உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதில் உள்ள பெக்டின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, அதே போல் அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.

தினமும் உணவின் போது வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும். சிறுநீரகம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயராது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.

உடல் எடை உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற அதீத பசி உணர்வு தான். வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும்.

வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லெண்ணெய் தரும் சரும ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா...?