Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீர்க்கங்காயில் உள்ள மருத்துவ பயன்கள் என்ன...?

Advertiesment
பீர்க்கங்காயில் உள்ள மருத்துவ பயன்கள் என்ன...?
பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
 
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில்   சேர்த்துக்கொள்ளலாம்.
 
சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
 
பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாகத் பயன்படுகிறது.
 
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 
தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும்.
 
வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிராம்புவை இந்த முறையில் சாப்பிடுவதால் இத்தனை மருத்துவ குணங்களா...?