Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் என்ன...?

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் என்ன...?
பிராய்லர் சிக்கனில் உள்ள கிருமிகள் மற்றும் வித்தியாசமான பாக்டீரியாக்கள், ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கிறது.

பிராய்லர் கோழியில் ஈகோலை என்னும் பாக்டீயா உள்ளது. இவையும் ஒருவகையான புட் பாய்சனை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி, இவை சிறுநீரக பாதையில் கடுமையான நோய்த்தொற்றுக்களையும் ஏற்படுத்துகிறது.  
 
பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும்வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல் அதற்கு செலுத்தப்படும் மருந்துகள் ஊசிகள் அனைத்தும் ரசாயனங்களால் ஆனது. 
 
உணவுகள் மூலமும் நேரடியாக மருந்துகள் மற்றும் ஊசிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விற்பனைக்காக வளர்கிற கோழிகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்காகவும், 40 நாட்களிலேயே அதிக எடையுடன் வளர்வதற்காகவும் இதுபோன்ற மருந்துகள் செலுத்தப்படுகிறது.
 
இத்தகைய மருந்துகள் மூலம் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வரும்போது பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றோம். இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.
 
பிராய்லர் கோழியில் அதிக அளவு கொழுப்பு காணப்படுகிறது. ஆனால் நாட்டுக் கோழியில் அத்தகைய கெட்ட கொழுப்புகள் இல்லை, அதே சமயம் உடலுக்கு மிகவும் நல்லதாகும்.
 
நாட்டுகோழி விலை மிகவும் அதிகமாக விற்கப்படுவதால் மக்கள் அதை வாங்கி உண்பதை தவிர்த்து விடுகின்றனர். அதற்கு மாறாக விலை மலிவாக கிடைக்கக் கூடிய, உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழியை வாங்கி சாப்பிடுகின்றனர்.
 
பிராய்லர் கோழியை அதிக அளவில் விரும்பி சாப்பிடுவதால் பல்வேறு பருவ மாற்றங்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். சிறு வயதிலேயே பூப்படைதல், இளம் வயதிலேயே அதிகப்படியான வளர்ச்சியடைதல், சர்க்கரை நோய் அதிகரிப்பு, புற்று நோய், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், தோல் பிரச்சனைகள், என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற பழங்கள் சிலவற்றை பார்ப்போம் !!