Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவகுணம் நிறைந்த கீழாநெல்லி இலையை பயன்படுத்தி நோய்களுக்கு தீர்வு...!!

Webdunia
கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து, அம்மியில் வைத்து அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.

கீழாநெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து  ஒரு சொட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.
 
மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மி.லி. அளவிலும், சிறுவர்கள் 15 மி.லி. அளவிலும் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.
 
கீழாநெல்லியை சுத்தம் செய்து அதில் மூன்று மடங்கு அளவு நீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒரு பங்காக சுண்டியது அதை குடித்துவரவேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். நச்சுக்கள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
 
சர்க்கரை நோயால் அவதிப்படுவர்கள் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள்  வரும்.
 
கீழாநெல்லி இலையை அரைத்து விழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து லேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிர்று கோளாறுகள் நீங்கும்.
 
உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள்  ஓடிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments