Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்...!

Advertiesment
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்...!
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக்  கொள்ளுங்கள்.
சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
 
உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை  தராது.
 
பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு,  அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
 
நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால், இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள். மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
 
கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
 
சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள். எனவே கவனமாக  இருப்பது அவசியம்.
 
நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது  ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி கொட்டுதலை தடுத்து இளநரையை போக்கும் அழகு குறிப்புகள்...!