Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களின் ஆரோக்கியமான கர்ப்ப கால வளர்ச்சிக்கு டிப்ஸ்....!

பெண்களின் ஆரோக்கியமான கர்ப்ப கால வளர்ச்சிக்கு டிப்ஸ்....!
பிரசவம் எளிதாக இருக்க கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். சுகபிரசவத்திற்கு உடல் நலம் மட்டுமல்ல மனநலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மகிழ்ச்சியான மனநிலை உள்ள பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள், ஆரோக்கியமான கர்ப்ப வளர்ச்சிக்கும், பிரசவ நேரத்தில் பிரசவத்தை  எளிதாக்கும்.
பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரத்தல், கருப்பை பழைய நிலைக்கு திரும்புதல் உள்ளிட்ட உடலியல் இயக்கங்கள் சரியாக நிகழ்வதற்கும் துணைபுரிகிறது. கர்ப்பிணிகளுக்கு மனச்சோர்வு ஏற்படுவது சாதாரண பிரச்சனைதான். ஆனால், தீவிர மனச்சோர்வு ஏற்பட்டால் அதை கவனிக்க வேண்டியது அவசியம். 
 
உறக்கம் குறைவதும், உடலில் சக்தி இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுவதும் தீவிர மனச்சோர்வுக்கு முதலில் தோன்றும் அறிகுறிகள். இந்த இரண்டுமே  கர்ப்பிணிகளுக்கு முதல் டிரைமெஸ்டரில் இயல்பாகவே இருக்கும். அடுத்ததாக, பசி குறைவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, காரணமற்ற கவலை,  எரிச்சல், கோபம், அழுகை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவை எல்லாமே மகப்பேறு மருத்துவரின் சரியான ஆலோசனை பெறுவது அவசியம்.
 
தீவிர மனச்சோர்வு பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகுதான் ஏற்படும். ஒரு சிலருக்குக் கர்ப்பகாலத்திலும் ஏற்படலாம். இவர்களுக்கு பயம், பதற்றம்,  மனக்குழப்பம், குழந்தையைப் பார்த்துக்கொள்வதில் ஆர்வமின்மை, ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கும்.
 
மன அழுத்தத்தை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை  எடுத்து கொள்ள வேண்டும். போதிய அளவு ஓய்வு, உளவியல் பிரச்சனைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்மையைப் பெருக்கும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த பூனைக்காலி!