Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளை குணமாக்கும் துத்தி இலை !!

Webdunia
துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். 

துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.
 
அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும். துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்.
 
குடிநீரில் விதையின் பொடி சிறிது கலந்து குடித்தால் பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோய் குணமாகும். துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். 
 
முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும். குடல்புண், தொண்டை கம்மல், சொரிசிரங்குகளையும் இதன் இலை கசாயம் குணமாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments