Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள தும்பை செடி...!!

Webdunia
தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு, சொறி, நமச்சல் போகும்.


தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.
 
சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும். தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். 
 
தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
 
தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும். தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால்  பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். 
 
தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு  ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments