Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு நோய்களை எதிர்த்து போராடும் மருத்துவ பொருளாக பயன்படும் திப்பிலி !!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:50 IST)
காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் எதிர்த்து போராடும் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் சித்த மருத்துவத்தில் “திரிகடுகம்” என அழைக்கபடுகிறது. பச்சைத் திப்பிலி கபத்தை உருவாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றும். திப்பிலிக் காய்களில் பைப்பரின், லாங்குமின் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன.

திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், 3 வருடங்களுக்குப் பிறகு ‘கண்ட திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலியின் கனிகள், மற்றும் முற்றாத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித் திப்பிலி’ என்ற பெயரில் மருந்து பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

திப்பிலி, மிளகு, சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்றவை குணமாகும், இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments