அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம், வயிற்று பெருமல் போன்றவை நீங்கும்.
தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, வறட்டு இருமலை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தி சுத்தமாக்கும் தன்மை கொண்டது அதிமதுரம். அதிமதுரம், வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. அதிமதுரத்தில் காணப்படும் பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிமானம் அடைய உதவுகிறது.
அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலுடன் சேர்த்து அரைத்து, அதனுடன் சிறிது குங்குமப்பூ போட்டு கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சில வாரங்களில் வழுக்கை தலையிலும் முடிகள் தோன்றும்.
அதிமதுரச் சாறு அல்லது அதன் கஷாயமானது பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. கண் பார்வை தெளிவாகும். அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து, அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.
அதிமதுர இலையை அரைத்துப் உடலில் பூசிவந்தால் உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய முதல் நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
சூட்டினால் உண்டாகும் வறட்டு இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளம் சூட்டில் வறுத்து சூரணம் போல செய்து தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமமான அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு சரியாகும்.