Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முசுமுசுக்கை கீரையில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும் !!

Webdunia
முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும்.
 
காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை  நீங்கும்.
 
கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழ்கினால் நல்ல  நிவாரணம் கிடைக்கும்.
 
முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும், காச நோயை குணபடுத்தும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
 
முசுமுசுக்கை வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பை நோய்கள் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முசுமுசுக்கையானது நுரையீரல்,  சுவாசக் கோளாறு, சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும்.
 
முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments