Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்...!

ஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்...!
செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். மேலும் சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். 
எந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும். அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்‘ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். 
 
அதிக நேரம் ஹெட் போனை பயன்படுத்துவதனால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும். சாலை விபத்துகளில் கணிசமான விபத்துகள் ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால் தான் நடக்கிறது.
webdunia
தொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும். அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது  வலி ஏற்படும். 
 
ஹெட்போன் பழக்கத்தினால் தற்போது இளவயதிலேயே கேட்கும் திறன் பாதிக்கிறது. இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் காது நன்றாக  கேட்பதற்கான மெஷின்களை இளம் வயதிலேயே பயன்படுத்த நேரிடும்.
 
தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்ற மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!