Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்புகள் பலமடைய வாரம் ஒருமுறை உணவில் அகத்திக்கீரை...!

Webdunia
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக்கீரை வயிற்றுப்புண் என்னும் நோயைக் குணப்படுத்தும். 
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு  பால் சுரக்கும்.
 
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சியம் சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.
 
உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால்  தேமல் முற்றிலுமாக மறையும்.
 
குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன்  மூலம் குணமாகும்.  
 
அகத்திக் கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். அகத்திக்கீரை மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது.
 
அகத்திக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து தற்காத்துக்  கொள்ளலாம். 
 
வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீரடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர்  தடையில்லாமல் போகும்.
 
பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து எலும்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments