Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்...!!

Webdunia
தினந்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.

* கண்பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள்,  தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள்  நீங்கும்.
 
* எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக்  கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
 
* தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி,  எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.
 
* பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே  உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
 
* சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். 
 
* பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்களுக்கு இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.
 
* தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments