அழகான கூந்தலுக்கு எண்ணெய் மிக முக்கியம். எந்தெந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்லது, அவற்றை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
* அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்தான் நல்லது. உச்சந்தலையில் ஒரு கை வைத்து, கால் மணிநேரம் ஊறவிட்டால், உச்சந்தலை நன்கு குளிர்ந்துவிடும். உச்சந்தலைக் குளிர்ந்தால், உடல் சூடு தணிந்துவிடும். உடல் சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
* ஆலிவ் ஆயிலில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், லேசாகச் சூடாக்கி தலையில் ஊறவைத்துக் குளியுங்கள். சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை எங்குத் தடவினாலும், அந்தப் பகுதியைக் கறுப்பாக்கும் தன்மைகொண்டது. அதனால், சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை நன்கு ஆறவைத்து தலைமுடி, புருவம் போன்ற இடங்களில் தடவி, அரைமணி நேரம் ஊறவைத்துக் குளியுங்கள்.
* தேங்காய் எண்ணெய்யை ஒருநாள் விட்டு ஒருநாள் வேர்க்கால்களில் மட்டும் தடவி, சீப்பால் வாரிவிடுங்கள். கூந்தல் உடையாமல், சிக்கு விழாமல் இருப்பதற்கு வெளிப்புற பூச்சாகத் தேங்காய் எண்ணெய் தடவுவது ரொம்பவே அவசியம்.
* பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமின்றி, ஸ்கால்புக்கும் நல்லது. கூந்தலைப் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும் பாதாம் எண்ணெய். இந்த ஆயிலைத் தலை முழுக்கத் தடவி, இரவு முழுக்க ஊறவிடுங்கள்.
காலையில் முகத்தில் எண்ணெய் வழிவதுபோல உணர்ந்தீர்கள் என்றால் மட்டும், தலைக்குக் குளியுங்கள். இல்லையென்றால் அப்படியே விட்டு விடலாம். இந்த மிக்ஸ்டு ஆயில் பொடுகுத் தொல்லை வராமல் தடுக்கும்.