Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:25 IST)
கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து, பியூரின் மற்றும் ஆக்சாலிக் அமிலம் உள்ளது.


அரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும். இக்கீரையை குழம்பில் அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும், காய்ச்சல் உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.

அரைக்கீரையை அரைத்துச சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.

இக்கீரையை குழம்பு செய்து அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.

இக்கீரை நரம்பு நோய்களை குணப்படுத்தும். மேலும் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியை உண்டாக்கும்.

இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும். மேலும் இருதயம், மூளை வலுப்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments