Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினசரி வறுத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!

Advertiesment
Fried Garlic
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (11:58 IST)
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் என பலவித சத்துக்கள் இருக்கின்றன.


பூண்டை சாப்பிடும் விதம், அது கொடுக்கும் நன்மையை தீர்மானிக்கும். பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பச்சையாக பூண்டை நன்றாக அரைத்து அதனை வடிகட்டிய நீரினை பருகினால் படை மற்றும் மூட்டைப்பூச்சிகளினால் ஏற்பட்ட அரிப்பு முழுவதுமாக குணமடையும்.

வறுத்த பூண்டை தினசரி சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் சளி தொந்தரவு பிரச்சனைகள் குறைந்துவிடும்.

வறுத்த பூண்டை உண்பதன் மூலமாக பல வகையான புற்றுநோய் ஏற்படுவது குறையும். ஏன் என்றால் அலில் சல்பேடு என்றால் அலில் சல்பேடு என்ற பொருள் உள்ள காரணத்தினால் இது புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகின்றது.

வறுத்த பூண்டை சாப்பிட்டால் கொலஸ்டரால்ன் அளவை சீராக வைத்துக் கொள்கிறது. உடலில் உள்ள தமணிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக்கொள்கின்றது.

பூண்டை வறுத்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை குறையும். இதனால், இதய நோய், மாரடைப்பு, ரத்த நாளங்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

வறுத்த பூண்டை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவதுடன், ஆரோக்கியமும் மேம்படும். வறுத்த பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அஜீரணமாக இருந்தாலும் கூட உணவு நன்கு செரிமானம் ஆகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதாக கிடைக்கும் சப்பாத்திக்கள்ளியில் உள்ள ஏராளமான நன்மைகள் !!