Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்சர் போன்ற வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்கு !!

அல்சர் போன்ற வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்கு !!
தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு நம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இது நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

இதற்கு சாத்தாவாரி, சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை, உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி என வேறு பல பெயர்களும் உள்ளன. இதன் தண்டு, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும்.
 
தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தினால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் குணமாகும். நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
 
ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது. குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் குணமாக்க கூடியது. இது வெள்ளை வெட்டு நோய் தொந்தரவுகளில் இருந்து நம்மை காக்கும். பித்தம், எலும்புருக்கி நோய், நாள் பட்ட காய்ச்சல் ஆகிய அனைத்துப் நோய்களையும் குணமாக்கும்.
 
இது உடல் உள்உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.
 
தண்ணீர் விட்டான் கிழங்கு வேர்த்தூளை, ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வந்தால் சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களை கொண்டுள்ள மங்குஸ்தான் பழம் !!