Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள தான்றிக்காய் !!

Webdunia
தான்றிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தான்றிக்காய் இனிப்பும் துவர்ப்பும் சுவை கொண்டது.


தான்றிக்காய் உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும். தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண், இருமல் ஆகியவற்றிற்கு தான்றிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
இரண்டு சிட்டிகை தான்றிக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு குணமாகும்.
 
தான்றிப் பொடி 3 கிராமுடன் சமஅளவு சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிடப் பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து தெளிவுறும். இதன் காயை நீர்விட்டு இழைத்துப் புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.
 
தான்றிக்காயின் தோலை வறுத்துப் பொடித்துத் தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம் நிற்கும். தான்றிக்காய் தோலைச் சேகரித்துச் சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரிச் சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.
 
தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய்ச் சர்க்கரை கலந்து தினசரிக் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.
 
தான்றிக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவடையும். சருமத்திற்கு பளபளப்பை தரும். தான்றிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தல் தைலமாகவும் மூட்டுவலி தைலமாகவும் பயன்படுகிறது.
 
தான்றிக்காய் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும். தான்றிக்காய், அதிமதுரம், திப்பிலி மூன்றையும் சேர்த்து கசாயம் செய்து 60 மில்லி குடித்து வந்தால் இருமல் மற்றும் செரிமான பிரச்சனை குணமாகும்.
 
தான்றிக்காய் பொடியுடன் கடுக்காய், நெல்லிக்காய் சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments