Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோம்பு !!

Advertiesment
Sombu Water
, செவ்வாய், 21 ஜூன் 2022 (15:37 IST)
சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், நம் உடலில் தேவையில்லாமல் தங்கி உள்ள கொழுப்புகளை வெளியேற்றும், குறிப்பாக வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது. இதனால் உடல் எடை குறையும்.


சோம்பை நீரில் போட்டு காய்ச்சி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்க படுகின்ற மெலட்டோனின் ஹார்மோனை சீராக சுரக்க செய்கிறது. இதனால் நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சோம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

சோம்பு நம் உடலில் உள்ள நீர்சத்துக்களை வெளியேற்றக்கூடியது. முக்கியமாக சிறுநீர் வழியாக வெளியேற்றக்கூடியது. இதனால் சிறுநீரக பாதையில் ஏதேனும் தோற்று ஏற்பட்டிருந்தால் அல்லது சிறுநீரக கற்கள் இருத்தால் அதை கரைக்கவும், போக்கவும் சோம்பு தண்ணீர்  நல்ல மருந்தாக பயன்படுகிறது.

பசியின்மை, மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சோம்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சொம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பிசம் ஆகியவற்றிற்கு சோம்பு நல்ல தீர்வு தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இத்தனை பயன்களா...!!