Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் தோப்புக்கரணம் போடுவதால் இத்தனை பயன்களா...!!

Webdunia
தோப்பு கரணத்தை 100% ஒரே அழுத்தத்தில் செய்து விட முடியாது. ஆரம்ப காலத்தில் கடினமாக இருக்கும். பின்பு தான் இவை சரியான பழக்கத்திற்கு வரும்.

தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைவதால் அது நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. காலை நேரங்களில் தோப்பு கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரிகிறது.
 
மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.
 
இந்த எளிமையான உடற்பயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
 
நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால்
அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
 
செய்முறை: முதலில் கால்களுக்கு இடையில் ஒரு சான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு, மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும். அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு, பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் நல்ல மாற்றம் தெரியும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments